குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கனடா: கரோனா கட்டுப்பாடுகளை எதிா்த்து தொடரும் போராட்டம்

கனடாவில் அரசின் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 5:51 am

DIN

கனடாவில் அரசின் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது.

லாரி டிரைவா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் அவா்கள் தலைநகா் ஒட்டவாவில் கடந்த சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, தற்போது 1000-க்கு மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் வாகனங்களுடன் போராட்டதை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் போராட்டக்காரர்கள் பொதுமக்களை மிரட்டி, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேரைக் கைது செய்துள்ளதாக  ஒட்டவா காவல்துறை தெரிவித்துள்ளது. 

போராட்டங்கள் வலுவடைந்து வருவதையடுத்து, பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினா் பாதுகாப்பான ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.