உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29.06 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன.
கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி அச்சமடைய வைத்துள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29,06,40,023-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 54,60,449 போ் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க | பிரிட்டன் பள்ளிகளில் கட்டாய முகக் கவசம்
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 25,45,45,924 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 30,633,650 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 89,975 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,61,42,175 -ஆகவும் பலி எண்ணிக்கை 8,47,408 ஆகவும் உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,49,22,882 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,81,893 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | பிரான்ஸ்: ஒரு கோடியை கடந்த கரோனா பாதிப்பு
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,93,228-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,19,171 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,32,35,401-ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,48,851-ஆக உள்ளது.
ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,05,37,966 -ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 3,10,518-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


