/

ஆப்கனில் கடும் பனிப்பொழிவு: 11 பேர் பலி, 23 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:55 am

DIN

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கனில் கடந்த ஒரு வாரமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பனிப்பொழிவில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். 

நாட்டின் 90 சதவீத நிலப்பரப்பில் பனி மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டதில் இறப்புகள் மற்றும் காயங்கள் தவிர நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளதாக தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளை மேற்கொள் காட்டியுள்ளது. 

சமீபத்தில் பெய்த கடும் பனி மற்றும் மழையால் பல நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டது. காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கான விமானங்களும் தடைப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.