
காதலுக்கு கண் இல்லை, காதல்.. காதல்.. இல்லையேல் சாதல்.. சாதல்.. என்ற பல வழக்குமொழிகளை எல்லாம் மெய்ப்பிக்கும் வகையில், மெக்ஸிகோவைச் சேர்ந்த ஒரு நபர் தனது காதலியின் தாய்க்காக தனது சிறுநீரகத்தையே தானமாக அளித்துள்ளார்.
உசியல் மார்டினெஸ்.. மெக்ஸிகோவைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றி வரும் மார்டினெஸ் வெளியிட்ட விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த விடியோவைப் பார்க்கும் பலரும் அவருக்கு தங்களது ஆழ்ந்த வருத்ததை பதிவு செய்தும் வருகிறார்கள்.
அதாவது, அந்த விடியோவில் அவர் கூறியிருப்பதாவது, தான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்ததாகவும், அவரது தாய்க்கு சிறுநீரகப் பிரச்னை வந்தபோது, அவரைக் காப்பாற்றுவதற்காக, தனது சிறுநீரகத்தையே தானமாக அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிறகு, முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ஒரு சில மாதங்களிலேயே இதற்கான பதிலடி எனக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்த நிலையில், தனது காதலி என்னை கைவிட்டுவிட்டு வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளையும் ஆறுதல்களையும் அளித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.