டோங்கோ எரிமலை வெடிப்பு; செயற்கைக்கோள் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படங்கள்

எரிமலை வெடிப்பிற்குப் பின்னர் டோங்கோ எந்தளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் வகையிலான சில செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
டோங்கோ எரிமலை வெடிப்பு
டோங்கோ எரிமலை வெடிப்பு
Published on
Updated on
1 min read

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவுகளில் ஒன்றான டோங்கோவில் எரிமலைகள் வெடித்துச் சிதறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாட்டின் அருகே நீருக்கு அடியே உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில், சுமார் 20 கிலோமீட்டர் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவியது.

நாட்டின் தலைநகரில் இருந்து 64 கிமீ தொலைவில் இந்த எரிமலை அமைந்துள்ளதால் டோங்கோ நாட்டிற்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக ஏற்பட்ட அதிர்வு, பல கீமீ தொலைவில் உள்ள இந்தியா உள்பட பல நாடுகளில் உணரப்பட்டது.

சில தீவுகளில் சுனாமி பாதிப்பும் கூட ஏற்பட்டது. இது தொடர்பான விடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எரிமலை வெடிப்பிற்குப் பின்னர் டோங்கோ எந்தளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் வகையிலான சில செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

டோங்கோ தலைநகர் உட்படப் பல தீவுகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதையே அது காட்டுகிறது. டோங்கோ நாட்டின் தலைநகரம் நுகுஅலோஃபா அடர் பழுப்பு சாம்பலால் சூழ்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. 
எரிமலை வெடிப்பு ஏற்பட்ட தீவு கிட்டத்தட்ட முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. 

நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, "பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட குறைந்தது இரண்டு பேர் எரிமலை வெடிப்பில் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் உயிரிழப்பு குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியே உள்ள இணைய கேபிளில் ஏற்பட்ட சேதம் காரணமாக டோங்கோ தீவில் இணையச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தலைநகரில் உள்ள விமான நிலைய ஓடுபாதையைச் சீர் செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் டோங்கோ நாட்டிற்கு ஏற்கனவே உதவிகளை அறிவித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com