இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதால் அங்கு பல்வேறு குழப்பங்கள் நீடித்த வண்ணம் உள்ளன. அரசியல் குழப்பங்களைத் தாண்டி மக்கள் அன்றாடத் தேவைகளுக்கு காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஒரு சில மாதங்களாகவே அங்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் நாள்கணக்கில் காத்திருந்து எரிபொருள் பெறுகின்றனர். அந்த நிலையே தற்போதும் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

ஆம்புலன்ஸ் அவசர உதவி எண்ணான 1990 யை அழைப்பைத் தவிர்க்குமாறு அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

இதன்படி, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, ரத்தினபுரி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் ஆம்புலன்ஸ் சேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, 3,700 மெட்ரிக் எரிபொருள் கொண்ட கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தது. மேலும், 3,740 மெட்ரிக் டன் எரிபொருள் கொண்ட மற்றொரு கப்பல் வந்ததாக அதிபர் மாளிகை தகவல் தெரிவித்திருந்தது. 

இலங்கையில் தற்போது அரசியல் நிலவரங்களை மிக மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com