கோத்தபய ராஜபட்ச துபையில் தஞ்சமடைந்தாரா?
கோத்தபய ராஜபட்ச நேற்று வெளிநாட்டுக்குத் தப்பியோடியதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் துபையில் தஞ்சமடைந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழும்பு: இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்த கோத்தபய ராஜபட்ச நேற்று வெளிநாட்டுக்குத் தப்பியோடியதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் துபையில் தஞ்சமடைந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் புரட்சி வெடித்தநிலையில், இலங்கை அதிபர் பதவியை நேற்று ராஜிநாமா செய்த கோத்தபய ராஜபட்ச, தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும், இலங்கையை விட்டு வெளியேறிய கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாகவும் இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் அபேவர்த்தன தெரிவித்தார். ஆனால், அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.
இதையும் படிக்க.. இலங்கை அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கோடிக்கணக்கில் பணம்!
இது குறித்து நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று பேசுகையில், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச நேற்று மாலை இலங்கையை விட்டு வெளியேறினார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இரத்னமாலா விமான தளத்திலிருந்து இரண்டு பெல்412 ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியறி அருகில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாகக் கூறினார்.
மக்களின் போரட்டத்தைத் தொடர்ந்து இலங்கை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச, நாட்டிலிருந்தும் வெளியேறினார். அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அவர் துபையில் தஞ்சமடைந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதையும் படிக்க.. சகோதரன் உடலுடன் சாலையோரம் காத்திருந்த சிறுவன்: விசாரணைக்கு உத்தரவு
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் குவிந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அதிபர் மாளிகை பதுங்கு குழிக்குள் இருந்த பணத்தை கைப்பற்றி போராட்டக்காரர்கள் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...