தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலகளவில் தங்கத்தின் தேவை ஏப்ரல் - ஜூன் மாத காலத்தில் 8% சரிவு

உலகளவில் தங்கத்தின் தேவையானது ஆண்டு தோறும் குறைந்து வருவது போல கடந்த ஏப்ரல் - ஜூன் மாத காலத்தில் 8 சதவீதம் குறைந்து, 948.4 டன்களாகியுள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

News image

உலகளவில் தங்கத்தின் தேவை ஏப்ரல் - ஜூன் மாத காலத்தில் 8% சரிவு (கோப்புப்படம்)

Updated On :28 ஜூலை 2022, 9:49 am


மும்பை: உலகளவில் தங்கத்தின் தேவையானது ஆண்டு தோறும் குறைந்து வருவது போல கடந்த ஏப்ரல் - ஜூன் மாத காலத்தில் 8 சதவீதம் குறைந்து, 948.4 டன்களாகியுள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

பணமதிப்பில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் மற்றும் டாலருக்கு நிகரான மதிப்பை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிஎஃப் எனப்படும் தங்க மின்னணு வர்த்தக நிதியத்தின் காரணத்தால் ஆண்டு தோறும் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது. உலக தங்க தேவை குறித்து 2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உலக தங்க கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2021ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் தங்கத்தின் தேவை 1,031.8 டன்களாக இருந்தது என்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.