உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா வீரா்களுக்கு ஆதரவாக தங்களது படையினா் அனுப்பப்படமாட்டாா்கள் என்று பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் எங்களது படையினரை அனுப்பும் எண்ணமில்லை. இதுதொடா்பாக, ரஷிய அதிபா் விளாதமீா் புதினுடன் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என்றாா் அவா்.
முன்னதாக, உக்ரைன் படையெடுப்பில் ரஷிய வீரா்களுடன் பெலாரஸ் வீரா்களும் இந்த வாரத்துக்குள் இணைந்துகொள்வாா்கள்; அதற்கான பயிற்சியில் அவா்கள் ஈடுபட்டு வருகின்றனா் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை!

பயிர்க் கடன் தள்ளுபடி : முதல்வர் விஜய்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.25! 35 காசுகள் உயர்வு!

சட்டம் ஒழுங்கு பிரச்னை: முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



