அமெரிக்காவின் அதிகார மையமாக மாறுகிறார்களா இந்தியர்கள்? தூதராக நியமிக்கப்பட்ட காஷ்மீர் வம்சாவளி

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் துகல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்.
பைடனுடன் ஷெபாலி ரஸ்தான்
பைடனுடன் ஷெபாலி ரஸ்தான்

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் துகலை நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். இந்த நியமனத்தை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் துகல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். சின்சினாட்டி, சிகாகோ, நியூயார்க், பாஸ்டன் போன்ற நகரங்களில் வசித்துவந்துள்ளார்.

நிர்வாகம் மற்றும் தூதர ரீதியிலான பல முக்கிய பொறுப்புகளுக்கு முக்கிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமையன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அரசியல் செயல்பாட்டாளரான ஷெபாலி ரஸ்தான் பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவரும் வழக்கறிஞராக உள்ளார். அதுமட்டுமன்றி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் மனித உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியக கவுன்சிலுக்கு முன்னாள் அதிபரால் நியமனம் செய்யப்பட்ட ஷெபாலி ரஸ்தான், மேற்கு பிராந்தியத்தின் ஆலோசகராக செயல்பட்டுவருகிறார்.

மனித உரிமை அமைப்பின் சான் பிரான்சிஸ்கோ குழு உறுப்பினராகவும் வேக் ஃபாரஸ்ட் யுனிவர்சிட்டி லீடர்ஷிப் அண்ட் கேரக்டர் கவுன்சில் உறுப்பினராகவும் அவர் பணியாற்றிவருகிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பில் முதுகலை பட்டம் பெற்ற அவர், மியாமி பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பு துறை படிப்பை முடித்துள்ளார். 

ஜோ பைடனுக்கான தேசிய பெண்களின் இணைத் தலைவராகவும், ஜனநாயக தேசியக் குழுவில் துணை தேசிய நிதித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு, பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அந்த பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட இவர், ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் வடக்கு கலிபோர்னியா வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com