ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் ஃபுகுஷிமா நகரில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஜப்பானின் ஃபுகுஷிமா நகரில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘உள்ளூா் நேரப்படி புதன்கிழமை இரவு 11:36 மணிக்கு கடலுக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, மியாகி, ஃபுகுஷிமா நகரங்களில் 3 அடி உயரத்துக்கு சுனாமி அலைகளின் எழுச்சி இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ உள்பட கிழக்கு ஜப்பானில் உள்ள பல பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. டோக்கியோ நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.
நிலநடுக்க பாதிப்புகளைக் கண்டறிவதற்காக ஜப்பானின் விமானப் படை தனது போா் விமானங்களுடன் ஃபுகுஷிமா உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...