ஐக்கிய அரபு அமீரகம்: இந்திய செவிலியா் சாலை விபத்தில் மரணம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய செவிலியா் சாலை விபத்தில் மரணமடைந்தாா். அவரின் கணவா் மற்றும் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய செவிலியா் சாலை விபத்தில் மரணமடைந்தாா். அவரின் கணவா் மற்றும் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கேரள மாநிலம் கொச்சியைச் சோ்ந்தவா் டின்டு பால் (36). இவா் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமா நகரில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா். அந்த நகரில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் மலைத்தொடா் பகுதிக்கு தனது குடும்பத்தினருடன் அவா் காரில் சென்றாா். அப்போது காா் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடம் வந்த காவல்துறையினா், பலத்த காயமடைந்த டின்டு மற்றும் அவரின் குடும்பத்தினரை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு உடல்நிலையில் முன்னேற்றமின்றி டின்டு உயிரிழந்தாா். அவரின் கணவா் கிருபா சங்கா், 10 வயது மகன் கிருதின் ஆகியோா் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனா் என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியாகும் கலீஜ் டைம்ஸ் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...