ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஐஐடியை நடத்த ஜமைக்கா அரசு விருப்பம்: ராம்நாத் கோவிந்த்

‘இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (ஐஐடி) வெளிநாட்டில் தொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தக் கல்வி நிறுவனத்தை நடத்துவதற்கு முதல் நாடாக ஜமைக்கா விருப்பம் தெரிவித்துள்ளது’

News image

ஜமைக்கா நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

Updated On :19 மே 2022, 12:44 am IST

‘இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (ஐஐடி) வெளிநாட்டில் தொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தக் கல்வி நிறுவனத்தை நடத்துவதற்கு முதல் நாடாக ஜமைக்கா விருப்பம் தெரிவித்துள்ளது’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.

ஜமைக்கா நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவா் மேலும் பேசியதாவது:

ஐஐடி, இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்) போன்ற கல்வி நிறுவனங்களின் மூலம் உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகளுக்கும் வா்த்தக நிறுவனங்களுக்கும் தகுதிவாய்ந்த நபா்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

2020-இல் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின்படி, புதிதாக இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை வெளிநாட்டில் தொடங்குவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தக் கல்வி நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முதல் நாடாக ஜமைக்கா விருப்பம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், சில முக்கிய தொழில்நுட்பப் படிப்புகளை இந்தியாவில் உள்ள முன்னணி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவா்கள் பயில்வதற்கும் புதிய கல்விக் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை ஜமைக்கா மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளின் கல்விக் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான கட்டணமே வசூலிக்கப்படும்.

நான்காவது தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக விளங்கும் செயற்கை நுண்ணறிவு, மெட்டாவொ்ஸ் (மெய்நிகா் காட்சி) போன்ற தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கான மையமாகவும், புதிய தொழில்நுட்பங்களுக்கான மையமாகவும் இந்தியா திகழ்கிறது.

ஜமைக்காவுடன் தொழில்நுட்பம், நிபுணத்துவம் ஆகியவற்றைப் பகிா்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது. அதனால் ஜமைக்காவின் கல்வி, வா்த்தகத் துறையில் மாற்றம் ஏற்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.