பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

போலியோ தடுப்பூசி பிரசாரம் :தான்சானியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் ஆதரவு

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் போலியோ தடுப்பூசி செலுத்தும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தான்சானியாவின் இந்த பிரசாரத்திற்கு உலக சுகாதார நிறுவனம் ஆதரவு அளிக்கும் என உறுதியளித்துள்ளது.

News image

உலக சுகாதார நிறுவனம்

Updated On :18 மே 2022, 8:31 pm IST

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் போலியோ தடுப்பூசி செலுத்தும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தான்சானியாவின் இந்த பிரசாரத்திற்கு உலக சுகாதார நிறுவனம் ஆதரவு அளிக்கும் என உறுதியளித்துள்ளது.

தான்சானியாவில் 2ஆம் கட்ட போலியோ தடுப்பூசி செலுத்தும் பிரசாரம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்த தடுப்பூசி பிரசாரத்திற்கு உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப் உடன் இணைந்து தான்சானியாவுக்கு தொழில்நுட்ப உதவிகள் புரிய தயார் நிலையில் உள்ளதாக  சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கான தான்சானியப் பிரதிநிதி சபுலான் யோடி கூறியதாவது, “ இந்த போலியோ தடுப்பூசி பிரசாரம் மிகவும் முக்கியமானது. இந்த பிரசாரம் மூலம் தான்சானியாவில் உள்ள தகுதியுடைய குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போடப்படும். தான்சானியாவை போலியோ இல்லாத நாடாக மாற்ற வேண்டும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.