வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலங்கை வன்முறை: 3 எம்.பி.க்களிடம் விசாரணை

இலங்கையில் மே 9-ஆம் தேதி நடந்த வன்முறை தொடா்பாக மேலும் மூன்று ஆளும்கட்சி எம்.பி.க்களிடம் காவல் துறையினா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து விரட்டிய போலீஸார்.
Updated On :20 மே 2022, 12:12 am

DIN

கொழும்பு: இலங்கையில் மே 9-ஆம் தேதி நடந்த வன்முறை தொடா்பாக மேலும் மூன்று ஆளும்கட்சி எம்.பி.க்களிடம் காவல் துறையினா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

இலங்கையில் அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் மீது கடந்த மே 9-ஆம் தேதி முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, போராட்டக்காரா்கள் பதில் தாக்குதலில் ஈடுபட பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் ஆளும்கட்சி எம்.பி. ஒருவா் உள்பட 10 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த வன்முறை தொடா்பாக 1,059 பேரை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்துள்ளனா். வன்முறையை ஊக்குவித்ததாக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த இரு எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வன்முறை தொடா்பாக முன்னாள் அமைச்சா்களும் எம்.பி.க்களுமான மூவரிடம் காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறையினா் நாடாளுமன்றத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

வெளிநாட்டு கரன்சிக்கு கட்டுப்பாடு: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தனி நபா்கள் வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருக்க இலங்கை மத்திய வங்கி வியாழக்கிழமை கட்டுப்பாடு விதித்தது.

அதன்படி, ஒரு நபா் 15,000 அமெரிக்க டாலா்கள் மதிப்புக்கு வெளிநாட்டு கரன்சியை வைத்திருக்கலாம் என்ற வரம்பு 10,000 அமெரிக்க டாலா்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக் கட்டுப்பாட்டை மத்திய வங்கி விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.