பற்றி எரிந்து வரும் இலங்கை...இரண்டு வாரங்களுக்கு பிறகு திரும்ப பெறப்பட்ட அவசர நிலை பிரகடனம்

கடந்த மே 6ஆம் தேதி நள்ளிரவு, அவசர நிலையை பிரகடனப்படுத்தி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியையும் அரசுக்கு எதிரான போராட்டத்தையும் இலங்கை எதிர்கொண்டு வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதற்கு மத்தியில், கடந்த மே 6ஆம் தேதி நள்ளிரவு, அவசர நிலையை பிரகடனப்படுத்தி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டார். பொருளாதார சரிவை சந்தித்துள்ள இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதனை ஒடுக்கும் விதமாக, கடந்த ஒரு மாத காலத்தில் இரண்டு முறை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இச்சூழலில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக அதிபர் செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு, சட்டம் ஒழுங்கின் நிலை மேம்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவசர நிலையின்போது, யாரை வேண்டுனாலும் பிடித்து கைது செய்ய காவல்துறையினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஏற்கனவே, கரோனா பெருந்தொற்றால் பெரும் பாதிப்புக்குள்ளான இலங்கையில் ராஜபட்ச குடும்பத்தின் தவறான கொள்கையால் பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. 

இதன் காரணமாக, அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபட்ச விலகக் கோரி மக்கள் போராட்டன் நடத்த, அவரின் ஆதரவாளர்கள் எதிர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக வெடிக்க, 9 பேர் கொல்லப்பட்டனர். மோதலில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டிலிருந்து உணவு பொருள்கள் மற்றும் எரிபொருளை  இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com