போரில் காணாமல் போனவர்களின் விவரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என உக்ரைன் அரசு தன்நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ரஷியா உக்ரைன் இடையேயான போர் 4 மாதங்களைக் கடந்து நடந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷியா தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை
மேலும் உக்ரைன் நகரங்களின் மீது டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷியா போரில் சிக்கியவர்களை பிணைக்கைதிகளாக சிறைபடுத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சுமத்தி வந்தது.
இந்நிலையில் ரஷியா இடையேயான போரில் காணாமல் போனவர்களை மீட்பதற்காக சமூக வலைத்தளங்களில் அவர்களைப் பற்றிய விவரங்களைப் பதிவிட வேண்டாம் என உக்ரைன் அரசு அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க | வாட்ஸ்ஆப் குழுவில் எத்தனை பேர் இருக்கலாம்? புதிய அறிவிப்பு வெளியீடு
இவ்வாறு பதிவிடுவது முக்கிய நபர்களை ரஷியா அடையாளம் காண ஏதுவாக அமைந்து விடும் எனவும், அவர்களை மீட்பதற்கு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் எனவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹன்னா மல்யார் ராணுவ வீரர்கள் என தெரியாமல் உக்ரைன் குடிமக்கள் என ரஷியா கைது செய்துள்ளவர்களை இத்தகைய சமூக வலைத்தளப் பதிவுகள் காட்டிக் கொடுத்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



