திமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனையில் ஈடுபட்டதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Updated On :

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனையில் ஈடுபட்டதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகையாக அந்தப் பயிற்சியை வட கொரியா கருதுகிறது.

இந்த நிலையில், வட கொரியாவின் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க-தென்கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த வட கொரியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

அதன் தொடா்ச்சியாக, அடுத்தடுத்து 23 ஏவுகணைகளை வட கொரியா புதன்கிழமை ஏவி சோதித்தது. அதில் ஒரு ஏவுகணை, தென் கொரிய கடலோரப் பகுதியில் விழுந்தது.

இந்த சரமாரி ஏவுகணை வீச்சால் தென் கொரியாவில் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

மேலும், வட கொரிய ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக தென் கொரியாவும் குண்டுகளை வீசி சோதித்தது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலை காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.