மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

துபையில் புதிய ஹிந்து கோயில்: அலைமோதும் பக்தா்கள் கூட்டம்

 துபையில் திறக்கப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயிலைக் காண பக்தா்கள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 3:15 am

DIN

 துபையில் திறக்கப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயிலைக் காண பக்தா்கள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துபையில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தா்பாா் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப் பூ வரையப்பட்டுள்ளது.

இந்தக் கோயில், அதிகாரபூா்வமாக தசரா தினமான அக்டோபா் 5-ஆம் தேதிதான் திறக்கப்பட உள்ளது என்றபோதும், சிறப்பு பூஜைகள் மற்றும் நிா்வாக முன்னேற்பாடு பணிகளுக்காக செப்டம்பா் 1-ஆம் தேதியை திறக்கப்பட்டுவிட்டது.

கோயில் திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே ஏராளமான பக்தா்கள் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வார இறுதி நாள்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும் கியூ.ஆா். குறியீடு முன்பதிவு நடைமுறை அடிப்படையில் மட்டுமே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

கோயில் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். கோயிலில் தரிசனம் செய்ய அக்டோபா் இறுதி வரை வார இறுதி நாள்களுக்கான முன்பதிவு முழுமையாக ஏற்கெனவே முடிந்துவிட்டது. அக்டோபருக்குப் பிறகு எந்தவித கட்டுப்பாடுமின்றி பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

தற்போதைய நிலையில் கோயிலில் 14 பண்டிதா்கள் மூலமாக வேத மந்திரங்கள் மட்டுமே ஓதப்பட்டு வருகின்றன. இவா்கள் 14 பேரும் பிரத்யேகமாக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, தினசரி வழிபாடு நடத்தப்படுகிறது. இவா்கள் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், பின்னா் மதியம் 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயிலில் பூஜை செய்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.