இதையும் படிக்க | உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
இந்தக் கடிதம் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 1986ஆம் ஆண்டு சிட்னி மக்களிடையே உரையாற்றும் வகையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கைப்பட எழுதிய கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடிதம் சிட்னி நகரில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டடத்தில் விலை மதிப்புடைய பொருள்களை வைக்கக் கூடிய அறையில் உள்ள கண்ணாடி பெட்டகத்தில் வைத்துப் பூட்டி பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதனை 2085ஆம் ஆண்டுதான் பிரித்துப் படித்து, அதிலிருக்கும் ராணியின் தகவல் சிட்னி மக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை, ராணியின் மிக நெருங்கிய உதவியாளர்கள் கூட அறிந்திருக்க முடியாது. காரணம், மிகவும் ரகசியமான இடத்தில் அமர்ந்துதான் ராணி அந்தக் கடிதத்தை எழுதினார். அதில் ஒன்றுமட்டும் நிச்சயம், அந்த ரகசியக் கடிதத்தை 2085ஆம் ஆண்டு வரை யாரும் பிரித்துப் படிக்கக் கூடாது என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த தகவலாக உள்ளது.