காங்கோ நாட்டில் ஏற்பட்ட வன்முறைப் போராட்டத்தில் இந்திய ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆா் காங்கோ) கிளர்ச்சிப் படைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வன்முறைக் கலவரங்களும் அரசிற்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன.
மேலும், காங்கோவில் நடைபெறும் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ஐ.நா கடந்த 10 ஆண்டுகளாக அமைதிப்படையை அங்கு நிறுத்தியுள்ளது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் அங்கம் வகிப்பர். இருப்பினும், அப்படையினர் வன்முறையாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: எலான் மஸ்க் விவகாரம்: வாக்கெடுப்பு நடத்துகிறது ட்விட்டர்
இந்நிலையில், நேற்று அந்நாட்டின் வடக்கு கீவ் மாகாணத்தின் கோமா, பேனி நகரங்களில் உள்ள ஐநா அமைதிப்படைக்கு முகாம்கள் மீது பொதுமக்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஷிஷூபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷ்னோய் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். மேலும், அமைதிப்படையினர் 15 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பின், காங்கோ ராணுவத்தினரால் போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
அமைதிப்படை மீதான இத்தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 148 வேலைநாடுநா்களுக்கு பணிநியமன ஆணை

தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல்

பண்ணாரி அம்மன் கோயிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

கல்பாக்கம் சுற்றுப்புற மக்களுக்கு அணுக்கதிா் வீச்சு பேரிடா் மேலாண்மை ஒத்திகை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



