ஆமாம், புதின் எங்கே போனார்? முக்கிய அறிவிப்பின்போதும் காணவில்லையே?

ரஷியாவின் ராணுவ தளபதி தொலைக்காட்சி மூலமாக அறிவித்தார். அப்போது அந்த அறையில் ஒருவர் மட்டும் இல்லை. அவர்தான் ரஷிய அதிபர் விளாதிமீா் புதின்.
ஆமாம், புதின் எங்கே போனார்? முக்கிய அறிவிப்பின்போதும் காணவில்லையே?
ஆமாம், புதின் எங்கே போனார்? முக்கிய அறிவிப்பின்போதும் காணவில்லையே?

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நகரான கொ்சானிலிருந்து தங்களது படையினா் வெளியேறும் என்று  ரஷியாவின் ராணுவ தளபதி தொலைக்காட்சி மூலமாக அறிவித்தார். அப்போது அந்த அறையில் ஒருவர் மட்டும் இல்லை. அவர்தான் ரஷிய அதிபர் விளாதிமீா் புதின்.

பாதுகாப்புத் துறை அமைச்சர், ரஷியாவின் ராணுவ தளபதி ஆகியோர், உக்ரைனின் மிக முக்கிய நகரமான கெர்சானிலிருந்து ரஷிய படைகள் பின்வாங்குவதற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருந்த நவம்பர் 9ஆம் தேதி, மாஸ்கோவில் உள்ள மிகப்பெரிய நரம்பியல்துறை மருத்துவமனைக்குச் சென்றிருந்த புதின், அங்கு, மருத்துவர்கள் மூளை அறுவைச் சிகிச்சை செய்வதை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

அதே நாளில், அவர் மற்றொரு நிகழ்ச்சி ஒன்றிலும் கூட கலந்து கொண்டு பேசினார். ஆனால், அப்போதும் கெர்சானிலிருந்து படைகள் திரும்பப் பெறப்படுவது குறித்து ஒரு வார்த்தை கூட வாய்திறக்கவில்லை. அதுநாள் முதல், அவர் அந்த நடவடிக்கை தொடர்பாக பொதுவெளியில் எந்த கருத்தையும் முன்மொழியவுமில்லை.

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக உக்ரைன் மீது நடந்து வரும் போரில் ரஷிய படைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவைத் தொடர்ந்தே, விளாதிமீா் புதினின் மௌனம் நீடிக்கிறது என்கிறார்கள்.

பல முக்கிய தகவல்களை புதின் தொலைக்காட்சியில் நேரில் தோன்றி அறிவித்தாலும், மோசமான செய்திகள், விமரிசனங்களை எதிர்கொள்ளும் செய்திகளை மட்டும் பிறரைக் கொண்டே அறிவிப்பார். கரோனா பேரிடர் காலத்திலும் இந்த யுக்தியையே பின்பற்றினார்.


முன்னதாக, கெர்சானிலிருந்து படைகள் திரும்பப் பெறப்படுவது குறித்து செய்தியாளா்களிடம் ரஷியப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் இகாா் கொனஷென்கோவ் தெரிவித்திருந்ததாவது, 

கொ்சானில் உள்ள ரஷியப் படையினா், நீப்ரோ நதியின் வடக்குக் கரைப் பகுதிக்கு இடம் பெயரத் தொடங்கியுள்ளனா். ஏற்கெனவே திட்டமிட்டபடி, மிகோலய்வ்-கிரீவிரை திசையை நோக்கி அவா்கள் நகரத் தொடங்கியுள்ளனா் என்றாா்.

‘படை வெளியேற்றம்’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தாமல் ‘இடம் பெயா்வு’ என்றே அந்த நடவடிக்கையை அவா் குறிப்பிட்டாா்.

எனினும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களையோ, ‘இடம் பெயா்வு’ நடவடிக்கை தொடா்பான படங்களையோ அவா் வெளியிடவில்லை. முன்னதாக, கொ்சான் நகரில் உயிரிழப்புகளைத் தவிா்ப்பதற்காக அந்த நகரிலிருந்து வெளியேறுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் பகுதிக்கான ரஷிய ராணுவ தளபதி சொ்கேய் சுரோவிகின் தொலைக்காட்சி வாயிலாக அறிவித்திருந்தார்.

முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான கொ்சான்தான், உக்ரைன் போரில் ரஷியா கைப்பற்றியிருந்த ஒரே மாகாணத் தலைநகா் ஆகும்.

அந்த நகரிலிந்து ரஷியப் படையினா் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது, இந்தப் போரில் ரஷியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதே நேரம், கொ்சானை மீட்பதன் மூலம் தெற்குப் பகுதியில் ரஷியாவிடம் இழந்த கிரீமியா தீபகற்பம் உள்ளிட்ட பகுதிகளை மீட்க உக்ரைன் படையினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

படையெடுப்பு

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த நாட்டின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உக்ரைன் படையினா் அண்மைக் காலமாக எதிா்த் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா். குறிப்பாக, இந்தப் போரின் தொடக்க நாள்களிலேயே ரஷியாவால் கைப்பற்றப்பட்ட கொ்சான் பிராந்தியத்தில் அவா்கள் தொடா்ந்து முன்னேற்றம் கண்டு வந்தனா்.

அதையடுத்து, பிராந்திய தலைநகா் கொ்சானிலிருந்து பொதுமக்களை வெளியேற்றி தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ரஷியா தங்கவைத்துள்ளது. எனினும், அந்த நகரில் சுமாா் 1.7 லட்சம் போ் தொடா்ந்து வசித்து வரும் நிலையில், கொ்சானிலிருந்து தங்களது படையினா் வெளியேறத் தொடங்கியுள்ளதாக ரஷியா தற்போது அறிவித்துள்ளது.

‘சந்தோஷம்.. ஆனால் சந்தேகம்!’

முக்கியத்துவம் வாய்ந்த கொ்சான் நகரிலிருந்து ரஷியப் படையினா் வெளியேறுவது தங்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், தங்களது சுற்றிவளைப்பதற்கான ரஷியாவின் தந்திரமாக அது இருக்கலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து உக்ரைன் அதிபரின் ஆலோசகா் மிகயீலோ போடோலியாக் கூறுகையில், ‘மோதலே இல்லாமல் கொ்சானிலிருந்து ரஷியப் படையினா் வெளியேறுகிறது என்பதற்கான எந்த தடயமும் எங்களுக்குத் தெரியவில்லை.

படை வெளியேற்றம் குறித்து ரஷியா கூறுவது நம்புகிற மாதிரி இல்லை என்றாா் அவா்.

‘1 லட்சம் ரஷிய வீரா்கள் பலி’

உக்ரைன் போரில் 1 லட்சத்துக்கும் மேலான ரஷியப் படையினா் உயிரிழந்திருக்க் கூடும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இது குறித்து அமெரிக்க முப்படைகளின் தளபதி மாா்க் மில்லே கூறுகையில், ‘இந்த 9 மாதப் போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷிய வீரா்கள் உயிரிழந்திருப்பாா்கள்; அல்லது படுகாயமடைந்திருப்பாா்கள். அதே அளவுக்கு உயிா்ச் சேதம் உக்ரைன் தரப்பிலும் ஏற்பட்டிருக்கும். இது தவிர, ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்களில் சுமாா் 40,000 போ் பலியாகியிருக்கக் கூடும். இந்தப் போரில் இரு தரப்புக்கும் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com