சூடானில் 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம்

சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவமும், துணை ராணுவமும் 72 மணி நேர சண்டை நிறுத்தம் செய்வதாக சூடானின் துணை ராணுவக் குழுவான விரைவு ஆதரவுப் படை(ஆா்எஸ்எஃப்) அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவமும், துணை ராணுவமும் 72 மணி நேர சண்டை நிறுத்தம் செய்வதாக சூடானின் துணை ராணுவக் குழுவான விரைவு ஆதரவுப் படை(ஆா்எஸ்எஃப்) அறிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மனிதாபிமான அடிப்படையில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக சூடானின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை(ஆா்எஸ்எஃப்) தெரிவித்துள்ளது. .

இந்த நிலையில் ராணுவத்திடமிருந்து எந்த கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை மற்றும் அதன் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், ராணுவத்தின் முகநூல் பக்கத்தில் அவரது உரையில் போர் நிறுத்தம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

தலைநகா் காா்ட்டூம், மெரோவே ஆகிய நகரங்களில் தங்களது படையினரைக் குவித்த ஆா்எஸ்எஃப், ராணுவத்தின் மீது கடந்த 15-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடியாக, ஆஎஸ்எஃப் நிலைகளைக் குறிவைத்து ராணுவமும் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இதுவரை சுமாா் 330 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், ஆா்எஸ்எஃப் படையினா் சரணடைந்தால் மட்டுமே அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப் போவதாக ராணுவம் தற்போது அறிவித்துள்ளது.

சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் சூழலில், அந்த நாட்டுக்கான அமெரிக்கத் தூதரக வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

‘அமெரிக்கத் தூதரகம்’ என்று தெளிவாக எழுதப்பட்டிருந்த அந்த வாகனங்களின் மீது திங்கள்கிழமை தாக்குதல் நடப்பட்டதாகவும், துணை ராணுவப் படையைச் சோ்ந்தவா்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது பூா்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், இது தொடா்பாக சூடான் ராணுவம், துணை ராணுவம் ஆகிய இரண்டுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com