சீனா: சியானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி; 6 பேரை காணவில்லை

சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியில் பெய்த கனமழைக்கு, வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியாகினர், 6 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 
சீனா: சியானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி; 6 பேரை காணவில்லை

பெய்ஜிங்: சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியில் பெய்த கனமழைக்கு, வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியாகினர், 6 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் சில பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் கோடையிலும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன, ஆனால் இந்த ஆண்டு சில பகுதிகள் வழக்கத்திற்கு மாறாக கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது, மற்ற பகுதிகள் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியானின் புறநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் பெய்த கனமழைக்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போனவர்களைக் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதற்கட்ட விசாரணையில், கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அருகில் உள்ள சாலைகள், பாலங்கள், மின்விநியோகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

ஷான்சியில் உள்ள ஆயுதமேந்திய போலீஸ் படை பாதிக்கப்பட்ட பகுதிக்கு 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை அனுப்பியது. பாதிக்கப்பட்ட பகுதியில் முதற்கட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உள்ளூர் தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் அவசரகால மேலாண்மை அதிகாரிகள் மீட்புப் பணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com