போரைத் துறந்து உதவிக்கரம்! துருக்கி, சிரியாவுக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள்!

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா நாடுகளுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 
தெற்கு துருக்கியில் உருக்குலைந்த கட்டடத்தில் மீட்புப் பணிகள்
தெற்கு துருக்கியில் உருக்குலைந்த கட்டடத்தில் மீட்புப் பணிகள்
Published on
Updated on
1 min read

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா நாடுகளுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

ரஷியாவுடனான போர் சூழல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக உக்ரைன் அரசு அந்நாட்டு வீரர்களை அனுப்பிவைத்துள்ளது. 

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 

இதனால், துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  துருக்கி, சிரியாவுக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மீட்புப் படையினரை அனுப்பிவைத்துள்ளனர். 

உக்ரைனில் போர்ச்சூழல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்நாட்டு வீரர்களும் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக துருக்கி விரைந்துள்ளனர். 

ரஷியாவுடன் போர் நடைபெற்று வருவதால், அந்நாட்டு வீரர்கள் விழிப்புணர்வுடனேயே செயல்பட்டு வருகின்றனர். எங்களின் உதவி தற்போது துருக்கி, சிரியாவுக்குத் தேவை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் படையைச் சேர்ந்த 88 வீரர்கள் வியாழக்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக பேசிய உக்ரைன் செய்தித்தொடர்பாளர் ஒலேக்சான்ட் கோருன்ஷி, எங்கள் நாட்டில் போர் நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது எங்கள் உதவி துருக்கி, சிரியாவுக்குத் தேவைப்படுகிறது. இது இருவருக்கும் பரஸ்பரமானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com