இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளது.
துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோருடன் படகு புறப்பட்டுள்ளது. லம்பேடுசா தீவில் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்து சிலர் நீந்தி கரைக்குச் சென்றுள்ளனர். மற்றவர்கள் கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர். 42 பேர் மீட்கப்பட்ட நிலையில் 8 பேர் மாயமாகியுள்ளனர்.
இந்த படகில் புர்கினா பாசோ, கினியா-பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் பயணித்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலோர காவல் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
லம்பேடுசா என்பது இத்தாலியின் தெற்கே உள்ள தீவு ஆகும். இது பல ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்தோர் பெருமளவில் வருகை தரும் இடமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



