தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஹமாஸிடம் 120 பிணைக் கைதிகள்: இஸ்ரேல் தகவல்

ஹமாஸ் அமைப்பினர் காஸாவில் சுமார் 120 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.   

News image
கோப்புப்படம்
Updated On :14 அக்டோபர் 2023, 5:29 am

DIN

ஹமாஸ் அமைப்பினர் காஸாவில் சுமார் 120 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.   

காஸாவிலிருந்து ஹமாஸ் குழுவினா், இஸ்ரேல் மீது கடந்த அக். 7ல் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினா். மேலும் இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். 

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலால் காஸா உருக்குலைந்துள்ளது.

இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்களை ஹமாஸ் படையினர், பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் அமைப்பிடம் இஸ்ரேலைச் சேர்ந்த  120 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் காஸா மீது நடத்திய தாக்குதலில் பிணைக் கைதிகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.