தாக்குதலுக்கு முன் மருத்துவமனையை பலமுறை எச்சரித்த இஸ்ரேல் படைகள்
கடந்த ஒரு வாரமாக, மருத்துவமனையை காலி செய்யுமாறு இஸ்ரேல் படைகள் பல முறை எச்சரித்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கான் யூனிஸ்: தெற்கு காஸாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், கடந்த ஒரு வாரமாக, மருத்துவமனையை காலி செய்யுமாறு இஸ்ரேல் படைகள் பல முறை எச்சரித்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடக்கு காஸா பகுதி மக்கள் பாதுகாப்பாக தெற்கு காஸாவுக்கு இடம்பெயர இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில், கடந்த செவ்வாயன்று, யாரும் எதிர்பாராதவகையில், தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் மருத்துவமனையில் இருந்த 500-க்கும் மேற்பட்டோா் பலியாகினர்.
இதையும் படிக்க.. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம்
தாக்குதல் குறித்துப் பேசிய ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம், இஸ்ரேல் படையினர் அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், இஸ்ரேல் அரசு, அப்பகுதியில் நாங்கள் தாக்கவில்லை என்றும், பாலஸ்தீனத்திலிருந்து வந்த குண்டு தவறுதலாக விழுந்திருக்கலாம் என்றும் கூறுகிறது. இதனை அமெரிக்காவும் நம்புகிறது.
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, இஸ்ரேல் பல முறை தொடர்ந்து எச்சரிக்கை அனுப்பிக்கொண்டே இருந்தது, இது அரபு நாடுகளின் கோபத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, ஆங்கிலிக்கம் பேராயரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், இஸ்ரேலி படையினர், எங்களை தொலைபேசி வாயிலாகவும், குறுந்தகவல் வயிலாகவும், சனிக்கிழமை முதல் குறைந்தது மூன்று முறை அழைத்து, மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றுமாறும், எச்சரிக்கைவிடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்டு, இந்த மருத்துவமனைக் கட்டடத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பேராயர் ஹோசம் நௌம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் வேறு எந்தப் பகுதியையும் குறித்து அல்ல, குறிப்பிட்டு மருத்துவமனைக் கட்டடத்துக்கே எச்சரிக்கை அனுப்பப்பட்டது. மேலும், மருத்துவமனையின் மீது சனிக்கிழமையே சிறிய தாக்குதலும் நடத்தப்பட்டு, அதில், பரிசோதனைக் கூடங்கள் சேதமடைந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களும் அன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. சனிக்கிழமை நடந்த தாக்குதலுக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் காரணமல்ல என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மருத்துவமனைக் கட்டடம் எப்போதுமே தாக்குதலுக்கான இலக்கு அல்ல என்று என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 7-ஆம் தேதி ஹமாஸ் படையினா் நடத்திய திடீா் தாக்குதலுக்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரையில் 2,778 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டும், 9,700 போ் காயமடைந்தும் உள்ளனா்.
காஸாவை முழுவதுமாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், வடக்கு காஸாவில் உள்ள மக்கள் தெற்கு காஸாவுக்கு வெளியேற வேண்டும் என்று எச்சரித்தது. உயிரைப் பாதுகாத்து கொள்ள சுமாா் 10 லட்சம் போ் வெளியேறி தெற்கு காஸாவுக்கு நடைப்பயணமாகச் சென்று தெற்கு காஸாவில் தஞ்சும் புகுந்து வந்தனர்.
இந்நிலையில், தெற்கு காஸாவின் ராஃபா, கான் யூனிஸ், மத்திய காஸா பகுதிகளிலும் இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை குண்டுகளை வீசி தொடா் தாக்குதல் நடத்தியது.
இதில் காஸா சிட்டியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் மருத்துவ உதவிகளுக்காக தஞ்சம் அடைந்திருந்த பாலஸ்தீனா்கள் 500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சா் தெரிவித்தாா். காஸாவில் இருந்து எகிப்துக்கு வெளியேற இருந்த ஒரே ராஃபா எல்லையோர வழித்தடமும் சேதமானது. உணவு, குடிநீா், மின்சாரம், மருத்துவ வசதி இல்லாமல் தெற்கு காஸாவின் தெருக்களில் லட்சக்கணக்கான பாலஸ்தீனா்கள் தஞ்சம் புகுந்துள்ளனா். இஸ்ரேலின் குண்டு மழையால் அவா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...