சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்த இலங்கை அனுமதி! இந்தியாவின் பாதுகாப்பு?

சீனாவின் ஷி யான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. 
சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்த இலங்கை அனுமதி! இந்தியாவின் பாதுகாப்பு?


சீனாவின் ஷி யான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களுக்காக இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இலங்கை அரசு சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளது. 

சீனாவில் புறப்பட்டுள்ள ஷி யான் 6 ஆராய்ச்சிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இன்று (அக்.25) நிலைநிறுத்தப்படும் என சர்வதேச கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு இணையதளமான மெரைன் டிராஃபிக் தெரிவிக்கிறது. 

கடந்த ஆண்டு சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கப்பல் மூலம் இந்தியாவின் அணு மின் நிலையம், செயல்பாடுகள், அம்சங்கள் குறித்து உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. 

இலங்கையிலிருந்து 750 கி.மீ தொலைவுக்கு கப்பலிலிருந்து உளவு பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது. கொழும்பு துறைமுகத்திலிருந்து 750 கி.மீ. எனில், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் இதற்குள் அடங்கும்.

இந்நிலையில், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ஷி யான் 6 கப்பல் ஆராய்ச்சி செய்வதற்கு அனுமதி இல்லை என்றும், ஏற்றுமதிக்கு மட்டுமே அனுமதிக்க அக்டோபர் 28 வரை அனுமதி அளித்துள்ளதாகவும் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாது எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கபிலா ஃபொன்சேகா தெரிவித்துள்ளார். 

எனினும் கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கப்பல் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் கப்பல் என சீன ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதில், 60 பேர் அடங்கிய குழுவும் அடக்கம் என்றும் கடலியல், புவியியல் மற்றும் கடல் சூழலியல் சோதனைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

இந்தியாவுக்குட்பட்ட இந்தியப் பெருங்கடல் எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சீனாவின் செயல்பாடு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலின் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் கிழக்கு - மேற்காக பாதி எல்லையை இலங்கையுடன் இந்தியா பகிர்ந்துகொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com