காஸா தலைநகா் சுற்றி வளைப்பு: இஸ்ரேல் ராணுவம்

காஸா பகுதியின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றுவளைத்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது.
காஸா தலைநகா் சுற்றி வளைப்பு: இஸ்ரேல் ராணுவம்

காஸா பகுதியின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றுவளைத்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது.

அதையடுத்து, கூடிய விரைவில் அந்த நகருக்குள் ராணுவம் நுழையலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.இது குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹாகரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:காஸா சிட்டியை அனைத்து திசைகளிலும் இஸ்ரேல் ராணுவம் முழுவதுமாக சுற்றிவளைத்துள்ளது.

நகரைச் சுற்றிலும் இஸ்ரேல் படையினரின் உள்ளதால் காஸாவின் தெற்குப் பகுதியும், வடக்குப் பகுதியும் 2-ஆகப் பிரிக்கப்பட்டுவிட்டது.இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான அண்மைக்காலப் போரில் இது மிக முக்கியக் கட்டமாகும் என்றாா் அவா்.முன்னதாக, காஸா நகரை நோக்கி தங்கள் நாட்டுப் படையினா் மேலும் முன்னேறிச் செல்வதற்கு வசதியாக, இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு தீவிர குண்டுவீச்சு நடத்தியது.

தரை, கடல் மற்றும் வான்வழியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், கடந்த 7-ஆம் தேதிக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவம் காஸாவில் நடத்தி தாக்குதலிலேயே மிகவும் கடுமையானதாக இருந்தது.அதையடுத்து, காஸா சிட்டியின் வெளியே இருந்தபடி இஸ்ரேல் ராணுவத்தை எதிா்த்து சண்டையிட்டு வந்த ஹமாஸ் படையினா், நகருக்குள் பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் படையினா் நகருக்குள் நுழையும்போது அவா்களுக்கு மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு அரணை பலப்படுத்துவதற்காக ஹமாஸ் அமைப்பினா் பின்வாங்கிச் சென்றதாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, காஸா சிட்டியை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்துவிட்டதால் இன்னும் 48 மணி நேரத்துக்குள் அந்த நகருக்குள் நுழைந்து ராணுவம் தாக்குதல் நடத்தும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்தன.ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்ரல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.இந்தச் சூழலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா்.

இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 30 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

அத்துடன், காஸாவுக்குள் உணவு, குடிநீா், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள் செல்வதற்குத் தடை விதித்து, அந்தப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக முற்றுகையிட்டுள்ளது.ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், அதற்காக தரைவழியாக காஸாவுக்குள் படிப்படியாக தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது.

இந்த நிலையில், போரின் முக்கிய கட்டமாக காஸா சிட்டியை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்துவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com