எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்

சா்வதேச அளவில் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவா் எலான் மஸ்க் ஏப்ரல் 21ஆம் தேதி இந்தியா வரவிருந்த நிலையில் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எலான் மஸ்க் இந்திய பயணம் குறித்து நன்கு தகவலறிந்த வட்டாரங்கள், அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 21, 2ஆம் தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமா் மோடியைச் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்வது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளவிருந்தார்.

இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்கள் உடனடியாக தெரியவில்லை என்றாலும், டெஸ்லாவின் முதல் காலாண்டு செயல்திறன் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அமெரிக்காவில் ஏப்ரல் 23 அன்று மஸ்க், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எலான் மஸ்க்
செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

இந்தியாவில் மின்சார காா்களைத் தயாரிக்க அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறாா். இந்நிலையில் நிறுவனத்தின் நிா்வாகிகள் குழுவுடன் ஏப்ரல் 22-ஆம் தேதி அவா் இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மின்சார வாகன தயாரிப்பு கொள்கையின்படி ரூ.4,000 கோடிக்குமேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரமாக மாற்றவும் டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவுக்கு வந்து, மின்சார வாகனத் தயாரிப்பு தொடா்பாக எலான் மஸ்க், பிரதமா் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்தியாவில் காா்களுக்கான இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால், அதை குறைக்குமாறு எலான் மஸ்க் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எலான் மஸ்க் ஏப்ரல் 10ஆம் தேதி தெரிவித்திருந்ததாவது, இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன் எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com