தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

ஹாரி பாட்டர் புதிய ஒலி வடிவில்!

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 4:21 pm

DIN

90-கள் மற்றும் 2000-த்தின் தொடக்கத்தில் வளர்ந்த குழந்தைகளை பாதித்த புனைவு கதாபாத்திரங்களில் முதன்மையானது ஹாரி பாட்டர்.

புத்தகங்களாகவும் படங்களாகவும் வெளியாகி கோடிக்கணக்கான பிரதிகள்/ காட்சிகள் விற்பனையான எழுத்தாளர் ஜே.கே.ரெளலிங்கின் ஹாரி பாட்டர் உலகை மையப்படுத்திய 7 புத்தகங்களும் ஒலி வடிவச் சித்திரங்களாக மாற்றப்படவுள்ளன.

அமேசான் நிறுவனத்தின் ஆடிபிள் மற்றும் பாட்டர்மோர் பப்ளிஷிங் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த ஒலிச்சித்திரத் தொடர் 2025-ம் ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.

100-க்கும் அதிகமான நடிகர்களின் குரல்கள் வழியாக துல்லியமான ஒலியமைப்பு, இசை உடன் ஹாரி பாட்டர் கதைகள் ஒலிவடிவில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படவுள்ளன.

ஆங்கிலத்தில் 1999-ல் முதன்முதலாக ஹாரி பாட்டர் புத்தகம் ஒலிவடிவில் உருவாக்கப்பட்டது. ஒரு குரல் ஒலிப்புத்தகமாக அது உருவானது.

2015-ல் ஆடிபிள் அதனை தனது தளத்தில் வெளியிட்டது. அதுமுதல் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மணி நேரங்கள் அந்த ஒலிப்புத்தகம் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.