அதையும் தாண்டி புனிதமானது... டால்பினுடனான மனிதரின் காதல்!

14 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள டால்பின் உடனான மனிதரின் காதல் பற்றி
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்க எழுத்தாளர் மால்கம் ப்ரென்னர் ஒரு டால்பினுடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியிருப்பது, சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயதான எழுத்தாளர் மால்கம் ப்ரென்னர், `வெட் காடெஸ்’ என்ற புத்தகத்தை, கடந்த 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார்.

இந்தப் புத்தகத்தில் மால்கம், விலங்குகளின் மீது காதல் கொள்பவரான `ஸூபைல்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், `வெட் காடெஸ்’ புத்தகத்தில் அவர் கூறியுள்ள `டால்பினுடனான காதல்’ பற்றிய குறிப்பு, 14 ஆண்டுகளுக்குப் பிறகு பேசுபொருளாகி உள்ளது.

புத்தகத்தில் மால்கம் கூறியிருப்பதாவது, `` என்னுடைய 20 ஆவது வயதில், ஃபுளோரிடாவின் சரசோட்டாவில் உள்ள ஒரு தீம் பூங்காவின் குளத்தில் புகைப்படங்கள் எடுக்க, எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, டால்பின்களுடன் நீந்தவும் அனுமதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில், டால்பின்களுடன் நான் நீந்தும்போதெல்லாம், டோலி என்ற பெண் டால்பின் மட்டும் என்னுடன் நெருக்கமாவதைக் கண்டேன்.

முதலில் எனக்கு ஆர்வம் இல்லாததால், அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், என்னைக் கவர்வதில், டோலி தொடர்ந்து மும்முரம் காட்டியது.

புலி, கரடியைப் போன்று இரண்டு விநாடிகளில் மனிதர்களைக் கொல்லக்கூடிய விலங்கு, என்மீது காட்டிய நெருக்கம், என்னை வியக்க வைத்தது. பின்னர், நானும் அதன்மீது அன்புகொண்டு, அன்பை வெளிப்படுத்தினேன்.

ஒருவருக்கொருவர் அன்பை உணர்ந்து வெளிப்படுத்தும் இருவரின் உறவில் வெறுக்கத்தக்க வகையில் என்ன உள்ளது? ஆனால், அடுத்த 9 மாதங்களில் பூங்கா மூடப்பட்டதால், டோலியுடனான உறவும் முறியடிக்கப்பட்டது.

டோலி இடமாற்றம் செய்யப்பட்டதால், நான் மனச்சோர்வு அடைந்தது மட்டுமில்லாமல், டோலியும் பிரிவின் தாக்கத்தை அனுபவித்தது.

இதனைத் தொடர்ந்து, இடமாற்றம் செய்யப்பட்ட சில காலத்திலேயே டோலி உயிரிழந்தது. டோலியின் உயிரிழப்பு என்னை அதீத சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி, நான் ஐந்து ஆண்டுகள் வரையில் மனச்சோர்வில் விழுந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com