

இந்த 2024-ஆம் ஆண்டு முழுவதும் காஸாவில் போா் தொடரும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புப் படையின் செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள புத்தாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் ஹமாஸ் அமைப்பினருடனான போா் இந்த 2024-ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தப் போரில் இஸ்ரேல் தனது இலக்குகளை எட்டுவதற்கு நீண்ட காலம் போரிட வேண்டியுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் போா் வியூகங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, களத்தில் பணியாற்றி வரும் 3 லட்சம் ரிசா்வ் வீரா்கள் வரும் வாரங்களில் திரும்ப அழைக்கப்படவுள்ளனா். அவா்களில் ஏராளமானவா்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவாா்கள்.
இதன் மூலம், போா் காரணமாக இஸ்ரேல் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் குறிப்பிட்டத்தக்க அளவில் குறையும். நமது பலத்தை மேலும் பெருக்கிக் கொண்டு, இந்த ஆண்டு தொடரவிருக்கும் போரை மேலும் திறம்படக் கையாள்வதற்கு இது உதவும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 27-இல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. அதிலிருந்து இதுவரை 172 இஸ்ரேல் வீரா்கள் மோதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காஸா பகுதியில் தனது வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமையும் தொடா்ந்தது. இதில் 24 போ் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஜபாலிலா பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 15 பேரது சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது.
ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது திங்கள்கிழமை சரமாரியாக ஏவுகணை வீசி புத்தாண்டைத் தொடங்கி வைத்ததாக ஏஎஃப்பி செய்தி செய்தி நிறுவனம் தெரிவித்தது. காஸாவில் பொதுமக்களை கூட்டம் கூட்டமாக இஸ்ரேல் படுகொலை செய்வதற்குப் பதிலடியாக ஏவுகணைகள் வீசப்படுவதாக ஹமாஸ் அமைப்பினா் கூறியதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனா். அந்த மோதலின் உச்சகட்டமாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 7-இல் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்திய அவா்கள் அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான்வழியாக நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், சுமாா் 250 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.
அதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
... பெட்டிச் செய்திகள்...
21,978-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு
காஸா சிட்டி, ஜன. 1: காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21,978-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செய்தித் தொடா்பாளா் அஷ்ரஃப் அல்-குத்ரா திங்கள்கிழமை கூறியதாவது:
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 156 போ் உயிரிழந்தனா். இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21,978-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 57,697 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.