
கராச்சி: பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
அங்கு 2023-இல் நடந்த பயங்கரவாதம் சாா்ந்த வன்முறைச் சம்பவங்களில் 1,524 போ் கொல்லப்பட்டுள்ளனா். இது, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயிரிழப்பாகும். வன்முறையில் இறந்தவா்களில் சுமாா் 1,000 போ் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா். 2023-இல் கைபா் பக்துன்கவா மாகாணம்தான் பயங்கரவாதச் செயல்களின் மையமாக இருந்தது என்று அந்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








