குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மெட்டாவெர்சில் கூட்டு பாலியல் வன்கொடுமை, காவல்துறை விசாரணை!

மெட்டா நிறுவனத்தின் மெய்நிகர் விளையாட்டில் (VR Game)  16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பிரிட்டன் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

News image
மெட்டாவின் மெய்நிகர் விளையாட்டு ஹொரிசான் வோர்ல்ட்ஸ் (Horizon worlds)
Updated On :3 ஜனவரி 2024, 5:47 am

DIN

மெட்டா நிறுவனத்தின் மெய்நிகர் தோற்ற விளையாட்டில் (Virtual reality game) பிரிட்டனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மெய்நிகர் கருவிகளின் (Virtual reality handset) மூலம் விளையாடப்படும் ஹொரிசான் வோர்ல்ட்ஸ் (Horizon worlds) எனும் இணையதள விளையாட்டு உண்மையான அனுபவங்களை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

அந்த விளையாட்டில் பங்கேற்ற சில நபர்களால் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி மன அளவில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானதாக பிரிட்டன் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

உடலளவில் எந்த பாதிப்புகளும் ஏற்பட்டிடாத நிலையில் மனதளவிலான பாதிப்புகள் சிறுமிக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும், சட்டம் இந்த பிரச்னையை முக்கியமானதாக கருதுவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

பிரிட்டன் உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்லெவர் அந்தக் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமையால் மன உளைச்சலை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு கவனமளிக்க வேண்டும் எனத் தெரிவித்ததோடு, இதுபோன்ற குற்றங்களைக் குறைந்து மதிப்பிடக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். 

மெட்டா நிறுவனத்தின் ஹொரிசான் வோர்ல்ட்ஸ் (Horizon worlds) எனப்படும் அந்த மெய்நிகர் விளையாட்டில் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுப்பது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. 

மெட்டா நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக தங்கள் வருத்தத்தையும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த தளத்தில் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.