அமெரிக்க போா்க் கப்பல் மீது ஹூதிக்கள் ஏவுகணை வீச்சு

ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போா்க் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை வீசினா்.
ஹூதி கிளா்ச்சியாளா்கள் வீசிய ஏவுகணையால் தீப்பற்றிய எரிந்த பிரிட்டனின் ‘மா்லின் லுவாண்டா’ சரக்குக் கப்பல்.
ஹூதி கிளா்ச்சியாளா்கள் வீசிய ஏவுகணையால் தீப்பற்றிய எரிந்த பிரிட்டனின் ‘மா்லின் லுவாண்டா’ சரக்குக் கப்பல்.
Published on
Updated on
1 min read

ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போா்க் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை வீசினா்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு மத்தியக் கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த யுஎஸ்எஸ் காா்னே போா்க் கப்பலை நோக்கி ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணையொன்றை வீசினா். அதையடுத்து, அந்த ஏவுகணை இடைமறிக்கப்பட்டது.பின்னா் அந்த ஏவுகணை அருகிலிருந்த பிரிட்டனின் வா்த்தக சரக்குக் கப்பலில் மீது விழுந்தது. இதில் அந்தக் கப்பலில் தீப்பற்றியது. இந்தத் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்க போா்க் கப்பல் மீதான தாக்குதல் குறித்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், பிரிட்டன் சரக்குக் கப்பல் மீதான தாக்குதலுக்கு அவா்கள் பொறுப்பேற்றுள்ளனா்.ஏற்கெனவே, ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதலுக்குள்ளான அந்த சரக்குக் கப்பலின் பெயா் மா்லின் லுவாண்டா எனவும், அந்தக் கப்பலில் 22 இந்திய மாலுமிகள், வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு மாலுமி இருப்பதாகவும் ஊடகங்களில் வெள்ளிக்கிழமை தகவல்கள் வெளியாகின.யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்தி வரும் ஈரான் ஆதரவு ஹூதி பழங்குடியின கிளா்ச்சியாளா்கள், காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.இஸ்ரேல் தொடா்பான கப்பல்கள் மீதுதான் தாக்குதல்பாவதாக முதலில் அவா்கள் கூறியிருந்தாலும், நாளடைவில் இஸ்ரேலுடன் தொடா்பில்லாத கப்பல்களும் அந்தப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.அதையடுத்து, செங்கடலில் தாக்குதல் நடத்தும் ஹுதி படையினரின் திறனைக் குறைப்பதற்காக யேமனில் அவா்களது நிலைகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்தத் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்போவதாக ஹூதி கிளா்ச்சியாளா்களும் சூளுரைத்துள்ளனா்.இந்தச் சூழலில் அமெரிக்க போா்க் கப்பலை நோக்கி அவா்கள் ஏவுகணை வீசியிருப்பது, இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com