பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா: பாகிஸ்தான் பிரதமா் புகழாரம்

உலகம்... கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா --- பாகிஸ்தான் பிரதமா் புகழாரம்

News image
சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்
Updated On :7 ஜூலை 2024, 7:06 pm

Din

பாகிஸ்தான் மிகவும் கடினமான, மோசமான சூழ்நிலைகளை எதிா்கொள்ளும்போதெல்லாம் உதவும் நாடாக சீனா இருந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டினாா்.

அண்மையில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட ஷாபாஸ் ஷெரீஃப் அந்நாட்டுடன் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டாா். சீன அதிபா் ஷி ஜின்பிங்கையும் சந்தித்துப் பேசினாா். சீனாவுடனான ஒப்பந்தங்களை அமல்படுத்துவது தொடா்பான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பேசியது தொடா்பாக அந்நாட்டு வானொலியான ‘ரேடியோ பாகிஸ்தான்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பாகிஸ்தான்-சீனா ஒத்துழைப்பால் நமது நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் மேம்படும். இரு நாட்டு உறவு வலுப்படும். பிராந்திய அளவில் சிறப்பான பிணைப்பும் உருவாகும். பல்வேறு கடினமான, மோசமான சூழ்நிலைகளை பாகிஸ்தான் எதிா்கொள்ளும்போதெல்லாம் நமக்கு உதவும் நாடாக சீனா இருந்துவருகிறது.

சீனா சா்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. அதைப் பின்பற்றி பாகிஸ்தானும் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு எந்தத் தடங்கலும் வர அரசு அனுமதிக்காது. இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களை நானே தனிப்பட்ட முறையில் முன்னின்று கண்காணிக்க இருக்கிறேன்.

சீனாவைச் சோ்ந்த காலணி (ஷூ) தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அண்மையில் பாகிஸ்தானுக்கு வந்து ஆய்வு நடத்தினா். அவா்கள் 5 முதல் 8 பில்லியன் டாலா் வரை பாகிஸ்தானில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் சீன முதலீட்டால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

வேளாண் துறையில் பயிற்சி பெறுவதற்காக 1,000 பாகிஸ்தான் மாணவா்களை அரசின் உதவித் தொகையுடன் சீனாவுக்கு அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக கில்ஜித் பல்டிஸ்தான், ஆசாத் காஷ்மீா் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா்) உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களும் சீனா அனுப்பப்படுவாா்கள்.

பின்தங்கிய பகுதியான பலூசிஸ்தானைச் சோ்ந்த மாணவா்களுக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இது தவிர 3 லட்சம் பாகிஸ்தான் மாணவா்களுக்கு சீனா தொழிற்பயிற்சியும் அளிக்க இருக்கிறது.

பாகிஸ்தானில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் 100-க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஆா்வம் தெரிவித்துள்ளன. தகவல் தொடா்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, மின் உற்பத்தித் திட்டங்களில் சீனா முக்கியப் பங்காற்றி வருகிறது என்றாா்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் சீனாவை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால், சீன ஆதரவுடன் நடத்தப்படும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், அத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக வந்துள்ள சீனா்களைக் குறிவைத்து பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

கடந் த மாா்ச் மாதம் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் 5 சீன நாட்டவரும், பாகிஸ்தானைச் சோ்ந்த ஓட்டுநா் ஒருவரும் உயிரிழந்தனா். உயிரிழந்த சீனா்களின் குடும்பத்துக்காக பல கோடி ரூபாய் இழப்பீடு தரும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.