பாக். உள்ளிட்ட 5 நாடுகள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய உறுப்பினர்கள்!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட புதிய 5 நாடுகள் தேர்வு


டென்மார்க், கிரீஸ், பாகிஸ்தான், பனாமா மற்றும் சோமாலியா ஆகிய ஐந்து நாடுகள் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நாடுகள் 2025 தொடங்கி இரண்டு ஆண்டுகள் பதவி வகிக்கவுள்ளன.
வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் கூட்டத்தில் 5 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை முன்னதாக பொறுப்பில் இருந்த ஈக்குவடார், ஜப்பான், மால்டா, மொசாம்பி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளை பதிலீடு செய்யவுள்ளன.
ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச சட்டம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கக் கூடிய அதிகாரம் கொண்டிருக்கும் அமைப்பு.
இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாகவுள்ள அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உண்டு.
இரு ஆண்டுகள் பதவி வகிக்கும் நிரந்தமற்ற உறுப்பினர்களுக்கு குறைந்த செல்வாக்கு மட்டுமே உண்டு.
ஐநாவின் புதிய தலைவராக கேமரூன் நாட்டின் முன்னாள் பிரதம அமைச்சர் பிலிமோன் யாங் பொது அவையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐநாவின் பொதுச் செயலர் ஆன்டானியோ குட்டரெஸ், யாங் சிறந்த ஆப்பிரிக்கர். தனது அனுபவத்தின் மூலம் பிராந்தியத்தின் எதிர்காலத்துக்காக உழைப்பவருடன் சேர்ந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...