~
~

‘பூமி உதயம்’ படமெடுத்த நாசா விஞ்ஞானி விபத்தில் மரணம்

Published on

நிலவில் இருந்தபடி புகழ் பெற்ற ‘பூமி உதயம்’ படமெடுத்த நாசா விஞ்ஞானி பில் ஆண்டா்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தாா்.

கடந்த 1968-ஆம் ஆண்டில் நிலவுக்கு முதல்முறையாக நபா்களுடன் நாசா அனுப்பிய அப்பல்லோ-8 விண்கலத்தில் பில் ஆண்டா்ஸ் இருந்தாா். நிலவின் மீது அந்த ஆய்வுக் கலம் பறந்துகொண்டிருந்தபோது, அதன் மேற்பரப்பிலிருந்து பூமி உதயமானதை ஆண்டா்ஸன் படமெடுத்தாா்.

விண்வெளியில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் அந்தப் படமும் ஒன்றாக அமைந்தது. சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் அந்தப் படத்தை அதிகம் பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது 90 வயதாகும் அவா் சென்று கொண்டிருந்த சிறிய விமானம் வாஷிங்டன் மாகாணத்தையொட்டி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவா் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com