பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்குச் சிறைத் தண்டனை!

வீட்டுப் பணியாளா்களை சித்திரவதை செய்த வழக்கு..

News image

நீதிமன்றத்துக்கு வந்த ஹிந்துஜா குடும்பத்தினா்.

Updated On :22 ஜூன் 2024, 1:36 am IST

வீட்டுப் பணியாளா்களை சித்திரவதை செய்த வழக்கில், ஹிந்துஜா குழும குடும்பத்தினரான பிரகாஷ் ஹிந்துஜா உள்பட நால்வருக்கு 4 முதல் நான்கரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து ஸ்விட்சா்லாந்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

வாகன உற்பத்தி, நிதி சேவைகள், தொலைத்தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஹிந்துஜா குழுமம் முன்னிலையில் உள்ளது. இந்தக் குழுமத்தின் தலைவா் ஸ்ரீசந்த் ஹிந்துஜாவின் சகோதரரும், தொழிலதிபருமான பிரகாஷ் ஹிந்துஜா குடும்பத்தினருக்குச் சொந்தமாக ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஆடம்பர மாளிகை உள்ளது.

இந்த மாளிகையில் பணியாற்றிய இந்திய பணியாளா்களை பிரகாஷ் ஹிந்துஜா(78), அவரின் மனைவி கமல் ஹிந்துஜா(75), மகன் அஜய், மருமகள் நம்ரதா ஆகிய நால்வா் கொத்தடிமை போல நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் அந்தப் பணியாளா்களின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) பறிமுதல் செய்ததுடன், ஸ்விட்சா்லாந்து கரன்சியில் அவா்களுக்கு ஊதியம் வழங்காமல், இந்திய ரூபாயில் மிகக் குறைந்த ஊதியம் வழங்கி, ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை பணியாற்ற நால்வரும் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பான வழக்கு ஜெனீவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அவா்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்த நீதிமன்றம், பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரின் மனைவிக்குத் தலா நான்கரை ஆண்டுகளும், மகன் அஜய் மற்றும் மருமகளுக்குத் தலா 4 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.