ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!
படம் | ஏபி

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக அதிகனமழை பெய்ததால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அதிலும் குறிப்பாக, பெருமழை, வெள்ளத்தால் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாக்லான் மாகாணம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் பர்கா, நஹரின் மற்றும் மத்திய பாக்லான் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் சென்றடைந்ததாக தலிபான் பொதுச் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மத்திய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தின் தீவிரம் காரணமாக, உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெருமழை வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவுகள், ஐ.நா. மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பாக்லானின் இயற்கைப் பேரிடர் தலைவர் ஹிதயதுல்லா ஹம்தார்ட் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com