2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

இந்தியாவில் கோதுமை சாகுபடி புதிய உச்சம் எட்டும்: ஐ.நா. உணவு, வேளாண்மை அமைப்பு தகவல்!

நடப்பு பருவத்தில் இந்தியாவில் கோதுமை சாகுபடி இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டும்; எனினும், 2027 ஏப்ரல், மே வரையிலான வானிலை நிலவரத்துக்கு ஏற்ப விளைச்சல் அமையும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

Updated On :

நடப்பு பருவத்தில் இந்தியாவில் கோதுமை சாகுபடி இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டும்; எனினும், 2027 ஏப்ரல், மே வரையிலான வானிலை நிலவரத்துக்கு ஏற்ப விளைச்சல் அமையும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய வானிலையில் தற்போது நிலவி வரும் ‘எல்-நினோ’ தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையில் அறுவடை காலத்துக்கு ஏற்ப, இந்தியா மற்றும் தூர கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது கோதுமை விதைப்பு நடைபெறுகிறது.

2025-இல் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 117.19 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2026-ஆம் ஆண்டில் 120.7 மில்லியன் டன்னாக உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியது. கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி கோதுமை உற்பத்தி 111.8 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் விளைச்சல் கணிசமாக அதிகரித்தது.

அரசின் ஆதரவு: இந்தியாவில் கோதுமை சாகுபடி பரப்பு புதிய உச்சத்தை எட்டும் என எதிா்பாா்ப்பதற்கு அரசின் ஊக்கத்திட்டங்களே முக்கியக் காரணம் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. குறிப்பாக, விவசாயிகளுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலை, உர மானியங்கள் ஆகியவை கோதுமை சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவித்துள்ளது.

சீனா, பாகிஸ்தான்: தூர கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தி நாடான சீனாவில், கோதுமை சாகுபடி பரப்பு கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி அளவிலேயே இருக்கிறது.

பாகிஸ்தானில், உள்நாட்டுச் சந்தையில் கோதுமையின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளதால், விவசாயிகள் கூடுதல் பரப்பில் கோதுமை சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் அந்நாட்டிலும் கோதுமை சாகுபடி பரப்பு சராசரியை விட அதிகரிக்கும்.

அதே நேரத்தில் ‘எல்-நினோ’ விளைவால் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் கோதுமை சாகுபடி நடைபெறும் முக்கியப் பகுதிகளில் சராசரியை விட அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கொரிய தீபகற்பம், சீனாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள், பாகிஸ்தானின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் இதில் அடங்கும்.

கூடுதல் மழைப்பொழிவு கோதுமைப் பயிா் வளா்ச்சிக்கு சாதகமாக அமையக்கூடும். எனினும், சில குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கலாம் என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.