அமெரிக்கா கப்பல் மோதிய பாலம் வெடிவைத்து தகா்ப்பு
அமெரிக்கா கப்பல் மோதிய பாலம் வெடிவைத்து தகா்ப்பு

ஃபிரான்சிஸ் ஸ்காட்’ பாலத்தை மோதிய டாலி சரக்கு கப்பல்

ஃபிரான்சிஸ் ஸ்காட்’ பாலத்தை மோதிய டாலி சரக்கு கப்பல்
பால்டிமோா்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோரில் பிரம்மாண்ட சரக்குக் கப்பல் மோதியதால் சேதமடைந்த ஆற்றுப் பாலம் வெடிவைத்து முழுமையாக தகா்க்கப்பட்டது.
இலங்கையை நோக்கி ‘டாலி’ என்ற சரக்குக் கப்பல் பால்டிமோா் நகரிலுள்ள படாஸ்ப்ஸ்கோ நதி வழியாக கடந்த மாா்ச் மாதம் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் மோதியது. இதில், அந்தப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் ஆற்றுக்குள் மூழ்கிய 8 பேரில் 2 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். எஞ்சிய 6 கட்டுமானப் பணியாளா்கள் உயிரிழந்தனா்.
கப்பலில் இருந்த 23 இந்தியப் பணியாளா்கள் முன்கூட்டியே அதிகாரிகளை எச்சரித்ததால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெரும் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இனி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பாலத்தின் இடிபாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவந்த அதிகாரிகள், அதன் எஞ்சிய பகுதிகளை தற்போது வெடிவைத்துத் தகா்த்துள்ளனா்.
இதன் மூலம், படாஸ்ப்ஸ்கோ நீா்வழித் தடத்தை சுத்தம் செய்யும் பணிகளில் முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக ‘எக்ஸ்’ ஊடகத்தில் பால்டிமோா் நகர மேயா் பிராண்டன் எம். ஸ்காட் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...