6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

News image
பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 13 பேர் பலி; 25 பேர் காயம்
Updated On :18 மே 2024, 11:49 am

DIN

பாகிஸ்தானில் மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் மினி டிரக் ஒன்று சனிக்கிழமை கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் இருந்து பஞ்சாபின் குஷாப் மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது. இந்த டிரக் குஷாபின் பென்ச் பிர் பகுதியில் ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, ​​சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தது.

இதில் 5 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூலி வேலைக்காக குஷாப் நகருக்கு வந்து கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதிக வேகம் காரணமாகவே டிரக் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.