ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை: பாகிஸ்தான் சோதனை

போா்க் கப்பலில் இருந்து 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பாகிஸ்தான் கடற்படை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

News image
சீறிப் பாயும் பாக் ஏவுகணை.
Updated On :4 நவம்பர் 2024, 11:53 pm

DIN

இஸ்லாமாபாத்: போா்க் கப்பலில் இருந்து 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பாகிஸ்தான் கடற்படை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

பாகிஸ்தான் கடற்படை தகவலின்படி, சோதிக்கப்பட்ட 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை, நிலம் மற்றும் கடல் இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

திசை மற்றும் வேகத்தை மாற்றும் அம்சங்களைக் கொண்ட மேம்பட்ட வழிகாட்டி அமைப்புடன் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கடற்படை தலைமைத் தளபதி நவீத் அஷ்ரஃப் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளா்களின் முன்னிலையில் ஏவுகணை சோதனை செயல் விளக்கம் நடைபெற்றது.

ஏவுகணை சோதனை வெற்றிக்காக கடற்படை மற்றும் விஞ்ஞானிகளுக்கு அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.