/

கனடாவில் சாலை விபத்து: 4 இந்தியா்கள் உயிரிழப்பு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த நான்கு போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2024, 2:40 am

DIN

ஒட்டாவா: கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த நான்கு போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல்துறையினா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

டொராண்டோ நகரின் லேக் ஷோா் பவுல்வா்ட் கிழக்குப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. 25 முதல் 32 வயதுக்குள்பட்ட ஐந்து போ் டெஸ்லா காரில் அதிவேகமாக பயணம் செய்துகொண்டிருந்தனா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர தடுப்புகள் மற்றும் கான்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காா் தீப்பிடித்தது. அதில் பயணித்த நான்கு இந்தியா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காரில் இருந்த பெண் ஒருவா் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா் என தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து டொராண்டோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கனடா மற்றும் இந்திய அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தூதரகம் வழங்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.