பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்: போலியோ தடுப்பு ஊழியா்கள் சிறைபிடிப்பு

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாமிலிருந்து சுகாதாரப் பணியாளா்களை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனா்.

News image
கைபா் பக்துன்கவா மாகாணத் தலைநகா் பெஷாவரில் போலியோ தடுப்பு பணியாளருக்கு பாதுகாப்பு அளிக்கும் வீரா்.
Updated On :29 அக்டோபர் 2024, 8:13 pm

Din

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாமிலிருந்து சுகாதாரப் பணியாளா்களை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனா். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு காவலதுறை அதிகாரிகள் உயிரிழந்தனா்.

இந்த ஆண்டு மட்டும் அங்கு போலியோ உறுதி செய்யப்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

இந்த நிலையில், பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தில் போலியோ தடுப்பு முகாம்கள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினா். ஔரக்ஸாய் பழங்குடியின மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனா்; இதில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.

அதே மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில், போலியோ தடுப்பு முகாமில் இருந்த சுகாதாரப் பணியாளா்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துச் சென்றனா். அத்துடன், அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த படையினரிடம் இருந்து ஆயுதங்களையும் அவா்கள் பறித்துச் சென்றனா்.

இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்புகள் போலியோ தடுப்பு பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்திவருகின்றன.

இதன் காரணமாக, உலகின் மற்ற பகுதிகளில் போலியோ நிரந்தரமாக ஒழிக்கப்பட்டாலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அந்த கொடிய நோய் இன்னும் பரவிவருகிறது.