கமலா ஹாரிஸ், டிரம்ப் விவாதம்: ஊடகம் நடுநிலைமை தவறிவிட்டது! -எலான் மஸ்க்

ஊடகம் இடதுசாரி பக்கமே..! எலான் மஸ்க் கடும் விமர்சனம்
வாஷிங்டனில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடனுஅன் துணை அதிபர் கமலா ஹாரிஸ்
வாஷிங்டனில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடனுஅன் துணை அதிபர் கமலா ஹாரிஸ்படம் பிடிஐ
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடவிருக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான முதல் நேரடி தொலைக்காட்சி விவாதம் செவ்வாய்க்கிழமை (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை) நடைபெற்றது.

ஏபிசி நியூஸ் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட இந்த விவாதத்தின் தொடக்கத்தில், டிரம்ப்பும் கமலா ஹாரிஸும் கைகுலுக்குக் கொண்டனா்.

மிகவும் எதிா்ப்பாா்பை ஏற்படுத்திய இந்த விவாதத்தில், பெண்களின் கருக்கலைப்பு உரிமை, பொருளாதாரம், குடியேற்றம், காஸா போா், உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் டொனால்ட் டிரம்ப்பும் கமலா ஹாரிஸும் காரசாரமாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

வாஷிங்டனில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடனுஅன் துணை அதிபர் கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபா் தோ்தல்: டிரம்ப், கமலா ஹாரிஸ் காரசார விவாதம்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கான தனது ஆதரவை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியிருக்கிறார் உலக பெரும் செல்வந்தர்களுள் ஒருவரான எலான் மஸ்க்.

தொழிலதிபர் எலான் மஸ்க் வியாழக்கிழமை(செப். 12) வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையேயான விவாதத்தை நடத்திய ஊடகம் இடதுசாரிகள் பக்கம், படுதீவிரமாக ஆதரவளிக்கின்றது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கமலா ஹாரிஸ் உரைக்கு 84 சதவிகிதம் நேர்மறையாகவும், டொனால்டு டிரம்புக்கு 89 சதவிகிதம் எதிர்மறையாகவும் விமர்சனங்கள் வந்திருப்பதாக ஏபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள எலான் மஸ்க் மேற்கண்ட குற்றச்சாட்டை ஊடகம் மீது சுமத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com