தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

அணு ஆயுதப் போருக்கு தயாராகும் ரஷியா? கொள்கையில் திருத்தம்!

அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான கொள்கையில் ரஷியா திருத்தம்...

putin

விளாதிமீர் புதின் - Aleksei Nikolsky

Published On :26 செப்டம்பர் 2024, 8:43 am IST

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான போர் கொள்கையில் திருத்தம் செய்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மாஸ்கோவில் பாதுகாப்புப் படைகளின் தளபதிகளுடன் புதன்கிழமை முக்கிய ஆலோசனையில் புதின் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையின் முடிவில், எதிரி நாடுகள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் ரஷியாவின் கொள்கையில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய திருத்தங்கள்

ரஷியா மீது தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு அணு ஆயுத உதவிகளை பிற நாடுகள் வழங்கினால், கூட்டுத் தாக்குதலாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள், கப்பல் மற்றும் டிரோன்கள் மூலம் மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதலை ரஷியா மீது நடத்தும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த ஆயுதங்களை கொண்டு, உக்ரைனுக்குள் நுழையும் ரஷியப் படைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், இந்த விதிகளை தளர்த்தி, ரஷியாவுக்குள் நுழைந்து ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைன் அனுமதி கோரியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.